கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கொல்கத்தா காளி கோயிலில் பிரபுதேவா ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு

7/29/2011 3:02:57 PM

கொல்கத்தா காளி கோயிலில் பிரபு தேவா படத்துக்கு ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கும் புதிய படம் 'வெடி'. விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்துக்காக கொல்கத்தாவில் உள்ள பிரபல தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு முன்னதாகவே கடிதம் கொடுத்திருந்தனர். நேற்று முன்தினம் நடிகர், நடிகைகளுடன் பட யூனிட் கோயில் முன்பு போய் இறங்கியது. அவர்களை காவலாளிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். 'ஏற்கனவே அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்துவிட்டோம்' பட குழுவினர் கூறினர். விண்ணப்பம் முழுமையாக இல்லாததால், ஷூட்டிங் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் வரை பட குழுவினர் காத்திருந்தும் அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் புறப்பட்டனர். நாளை மறுநாள் பூங்கா ஒன்றில் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றிருந்தனர். அங்கு சென்று ஷூட்டிங்கை நடத்தினர். ஷூட்டிங் ரத்து, லொகேஷன் மாற்றம் போன்றவற்றுக்கு ரூ.5 லட்சம் செலவானதாக பட குழு மேனேஜர் தெரிவித்தார். இதுபற்றி சமீரா ரெட்டி கூறும்போது, 'எல்லோரும் ஷூட்டிங்கில் பங்கேற்றும் எண்ணத்துடன் கோயில் முன்பு கூடினோம். எதிர்பாராத விதமாக அனுமதி மறுக்கப்பட்டதால் பாதி நாள் வீணானது. ஆனாலும் காளி தேவியை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது' என்றார். 'பட குழு சார்பில் கடந்த 21ம் தேதி விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. அது முழுமையாக இல்லை. எவ்வளவு நேரம் ஷூட்டிங் நடக்கும், வியாபார நோக்கத்துக்காக ஷூட்டிங் நடக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. சம்பவத்துக்கு பிறகு புதிய விண்ணப்பம் கொடுத்தனர். ஆனால் அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் தேவை' என்று கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.




 

Post a Comment