தாமதமாகும் மங்காத்தா ஆடியோ
7/26/2011 12:07:30 PM
மங்காத்தாவில் மொத்தம் 9 பாடல்கள். இதில் ஒரு பாடலை விளம்பரத்துக்காக ஏற்கனவே வெளியிட்டுள்ள யுவன், மங்காத்தா படத்தின் ஆடியோ தாமதமாவதற்கு நான்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள எட்டுப் பாடல்களில் ஒரு பாடல் மட்டும் இன்னும் தயாராகவில்லை. பலமுறை டியூன் போட்டும் குறிப்பிட்ட பாடல் மட்டும் திருப்திகரமாக வரவில்லை என யுவன் தெரிவித்துள்ளார். மங்காத்தா அஜீத்தின் 50வது படம் என்பதால் படத்தின் குவாலிட்டியில் எந்த காம்ப்ரமைஸும் செய்வதாக யாருக்கும் எண்ணமில்லை. லேட்டாக வந்தாலும் சுவீட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருப்பதால் தாமதத்தை ஒரு தடையாக யாரும் கருதவில்லை.
Post a Comment