இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விஜய்யிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, அவர் கையெழுத்திட மறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் இலங்கை தமிழ் இணையதள வானொலிக்கு அளித்த பேட்டியில், “விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் யாரும் எங்களிடம் கையெழுத்து கேட்டகவில்லை. அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படும் செய்தி இது.
இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை. யாரிடமும் கையெழுத்துப் போடமாட்டேன் என விஜய் சொல்லவும் இல்லை.
இலங்கை மக்களை மிகவும் நேசிப்பவர் விஜய். தமிழ் ஈழம் மலரவும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவும் அவர் வழி செய்வார்,” என்று கூறியுள்ளார்.
Post a Comment