புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமை மற்றும் சர்ச்சைகளை உள்ளது உள்ளபடியே படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.
இதில் சாய்பாபா வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை தேர்வு செய்துள்ளனர்.
பல கோடி பக்தர்கள் வணங்கி வந்த சாய்பாபா சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு நாடெங்கிலும் பக்தர்கள் உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா பல்வேறு அற்புதங்கள் செய்துள்ளதாக கூறி வழிபடுகின்றனர். அவை அனைத்தும் காட்சிபடுத்தப்படுகிறது.
சாய்பாபா மறைவுக்கு பிறகு அங்கிருந்த பணத்தை கடத்தியதாக மடத்து பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற சர்ச்சைகளையும் இந்தப் படத்தில் வைக்கின்றனர். இந்தப் படத்தை அரசியல் பிரமுகரான ஹரிராம ஜோகையா தயாரிக்கிறார்.
படப்பிடிப்பை புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டால் அதுபோன்ற அரங்குகள் அமைத்து எடுக்கப் போகிறார்களாம்.

Post a Comment