விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியனை இயக்கப் போவது பூபதி பாண்டியன்?

|


அதிரடி வேடங்களில் அதகளம் செய்து அமர்க்களப்படுத்திய (ஒருகாலத்தில்) விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் முழு நீள ஹீரோவாக களம் இறங்குகிறார் என்பது பழைய செய்தி. இப்போது அவருக்கான முதல் இயக்குநரை கேப்டன் கண்டுபிடித்து விட்டார் என்பது புதுச் செய்தி.

சண்முகப் பாண்டியனை, இயக்குநர் பூபதி பாண்டியன் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று கூறி இயக்கலாம் என்று தெரிகிறது.

கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து விஜயகாந்த் ஓய்வு பெற்று விட்டார் என்றே கூறலாம். இனி அவருடைய பாதை அரசியல் பாதையாக மட்டும் இருக்கும். அப்படியே சினிமாப் பக்கம் வந்தாலும் கூட தயாரிப்பாளராகவே அவர் இனி முகம் காட்டுவார்என்று தெரிகிறது.

இந்த நிலையில்,தனது இளைய மகன் சண்முகப்பாண்டியனை களம் இறக்குகிறார் விஜயகாந்த். இதற்காக, சண்முகத்திற்கு ஏற்ற கதையை அவர் தேடி வருகிறார்.

கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் டைரக்டர் பூபதி பாண்டியன் அழைத்த கேப்டன், குடும்பத்துடன் உட்கார்ந்து கதை கேட்டுள்ளார். இதில் பூபதி பாண்டியன் கூறிய ஒரு கதை அனைவருக்கும் பிடித்து போக, அடுத்த கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் விஜயகாந்த்.

எனவே விரைவில், விஜயகாந்த் ஸ்டைலில் கை, கால்களை காற்றில் பறக்க விட்டு அனாயசமாக அட்டாக் செய்யும் ஜூனியர் விஜயகாந்த்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
 

Post a Comment