அடுத்த 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகி ரஷ்யாவின் மார்கரிட்டா லெவிவா?

|


ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா(31). அவர் ஸ்பிரட், லிங்கன் லாயர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்போது லெவிவாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

அடுத்து வரவிருக்கும் 23-வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க்குக்கு ஜோடியாக லெவிவா நடிப்பார்.

பாண்ட் நாயகி என்றால் அழகாகவும், நம்பிக்கையுடனும் அதே சமயம் புதிரான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மார்கரிட்டாவுக்கு இந்த தகுதிகள் அனைத்தும் உள்ளன என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய பாண்ட் படத்தின் தயாரிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அதற்குள் லெவிவாவை இறுதி செய்துவிடுவார்கள் என தெரிகிறது.

 

Post a Comment