7/11/2011 10:11:36 AM
அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், 'தடையற தாக்க'. மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்துக்கு இந்தி நடிகை பிராச்சி தேசாய் ஹீரோயினாக ஒப்பந்தமானார். சென்னையில் ஷூட்டிங்குக்கு வந்த பிராச்சி, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மும்பை திரும்பினார். பின்னர் படக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது அவரை நீக்கி விட்டு மம்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுபற்றி அருண்விஜய்யிடம் கேட்டபோது, 'படத்துக்கு முதலில் மம்தாவிடம்தான் கேட்டோம். அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்றும் மலையாளத்தில் மட்டுமே நடிக்கிறார் என்றும் அவர் தரப்பில் தகவல் வந்தது. இதனால் இந்தி நடிகையை தேர்ந்தெடுத்தோம். இப்போது மம்தாவிடம் கேட்டபோது நடிக்க சம்மதித்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்' என்றார். இதில் ராகுல் பிரீத் சிங் என்ற இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார்.
Post a Comment