7/27/2011 10:38:06 AM
'யு' சான்றிதழ் பெறும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த, 'யு' சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு, நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேடு நகராட்சிப் பகுதிகளுக்கு 15 சதவீதமும், ஊராட்சிப் பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. மேலும், சிறிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற, 'டிஜிட்டல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
Post a Comment