லிங்குசாமியின் அனைத்துப் படங்களையும் வாங்கியது யுடிவி!

|


லிங்குசாமியின் இயக்கம் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமையையும் வாங்கியது யுடிவி மோஷன் பிக்சர்ஸ்.

லிங்குசாமியுடன் இதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று யுடிவி. ராவணன் உள்ளிட்ட பல பெரிய படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.

தற்போது தெற்கில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

லிங்குசாமி இயக்கும் 'வேட்டை', அவர் பங்குதாரராக உள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'வழக்கு எண் 18/9', பிரபு சாலமன் இயக்கும் 'கும்கி' ஆகிய மூன்று படங்களையும் இப்போது யுடிவி வாங்கியுள்ளது.

இந்த மூன்றில் முதலில் வரும் படம் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9.
 

Post a Comment