சம்பளம் உயர்த்தினார் திவ்யா!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சம்பளம் உயர்த்தினார் திவ்யா!

7/21/2011 2:49:28 PM

கன்னடத்தில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் திவ்யா. இவர் கடைசியாக நடித்த 'ஜானி மேரா நாம்', 'சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகியவை ஹிட்டாயின. இதனால் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் திவ்யா. ரூ.27 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தவர், அடுத்து 'காந்தி நகர மகாத்மே' படத்துக்காக ரூ.32 லட்சம் வாங்கியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்குகிறார் பிரியாமணி. ஒரு படத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை வாங்குகிறார். பூஜா காந்தி ரூ.22 லட்சமும் பாவனா ரூ.15 லட்சமும் வாங்குகின்றனர். சம்பளம் உயர்த்தியதை பற்றி திவ்யா கூறும்போது, "நான் செட்டில் டைரக்டருடன் சண்டை போடுகிறேன், தயாரிப்பாளருடன் தகராறு செய்கிறேன் என்றெல்லாம் விமர்சித்தார்கள். எனக்கு கன்னட சினிமாவில் நடிக்க தடை போடுவதாகவும் சிலர் மிரட்டினார்கள். அத்தனை பிரச்னைகளையும் மீற¤ ஜெயித்துக் கொண்டிருக்கிறேன். தவறு நடக்கும்போதுதான் மற்றவர்களுடன் சண்டை போடுவேன். அதில் என்ன தவறு? இப்போது சண்டை போட்டு யாரிடமும் அதிக சம்பளம் வாங்கவில்லை. என் மார்க்கெட்படிதான் சம்பளம் வாங்குகிறேன்" என்றார்.




 

Post a Comment