செல்வராகவன் - கீதாஞ்சலிக்கு ரஜினி போனில் வாழ்த்து!

|


சமீபத்தில் திருமணமான இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் ரஜினி ஓய்வு பெற்று வருவதால், அவரால் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ரஜினி வீட்டிலிருந்து ஐஸ்வர்யா தவிர வேறு யாரும் இதில் பங்கேற்க முடியவில்லை. லதா ரஜினியும், சௌந்தர்யாவும் ரஜினியுடன் சிங்கப்பூரிலேயே உள்ளனர்.

எனவே போன் மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் ரஜினி. நேரில் வந்து வாழ்த்த முடியாதமைக்கு வருத்தமும் தெரிவித்தாராம்.

ரஜினியின் வாழ்த்து குறித்து செல்வராகவன் கூறுகையில், "திருமணம் முடிந்த உடன் எனக்கு வந்த முதல் வாழ்த்து ரஜினி சாரிடமிருந்துதான். அவரது குரலைக் கேட்டதும் நானும் கீதாஞ்சலியும் நெகிழ்ந்து போனோம்," என்றார்.
 

Post a Comment