7/27/2011 10:42:41 AM
கொச்சியில் நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலின் சென்னை, பெங்களூர், கொச்சி, திருவன ந்தபுரம் வீடுகள், அலுவலகங்களில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மோகன்லால் வீட்டில் 2 அறைகள் லேசர் தொழில்நுட்பத்தில் பூட்டப்பட்டு இருந்தன. வருமான வரி அதிகாரிகளால் திறக்க முடியவில்லை. மோகன்லால் அல்லது அவருடைய மனைவியின் கை விரல் ரேகையை பயன்படுத்தி மட்டுமே அவற்றை திறக்க முடியும் என்பது தெரிந்தது. இதையடுத்து, கொச்சியில் உள்ள வீட்டுக்கு உடனே வரும்படி மோகன்லாலை வருமான வரி அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், மோகன்லாலின் கொச்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். அதில், 4 அதிகாரிகள் ஈடுபட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
Post a Comment