கமல் படத்திற்காக மோதும் சல்மான் கான், அக்ஷய் குமார்

|


கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நகைச்சுவை கலந்த கலாட்டா படமான மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சல்மான் கானும், அக்ஷய் குமாரும் கடும் போட்டியில் குதித்துள்ளனராம்.

1990-களில் வெளிவந்த சூப்பர் ஹிட் நகைச்சுவை படம் கமல் ஹாசனின் மைக்கேல் மதன காம ராஜன். இந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இயக்குனர்கள் ஃபாரா கானும், பிரியதர்ஷனும் போட்டி போடுகின்றனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்து, நான்கு இடங்களுக்கு மாறிப் போய் விடும் 4 ஆண் குழந்தைகளின் கதை தான் மைக்கேல், மதன, காம ராஜன். இதில் கமல் ஹாசன் 4 வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். குஷ்பு, ரூபிணி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஊர்வசியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அடித்த காமடி லூட்டி அனைவரையும் ஈர்த்தது.

இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து படத்தை மெகா ஹிட்டாக்கியிருந்தது. படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதி, தயாரிக்கவும் செய்திருந்தார். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து எடுக்க ஃபாரா கானும், அக்ஷய் குமாரை வைத்து எடுக்க பிரியதர்ஷனும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மைக்கேல் மதன காமராஜனாகப் போவது யார் சல்லுவா, அக்கியா?

 

Post a Comment