7/27/2011 10:37:24 AM
‘காதலிக்க நேரமில்லை’, ‘நான்’, ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’, ‘அதே கண்கள்’ உட்பட 100க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன் (71). இவர் கடந்த சில மாதங்களாக உடல¢ நலமில்லாமல் இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், தி.நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். ரவிச்சந்திரனின் மகன் நடிகர் அம்சவர்தன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் சிவகுமார், சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மனோரமா, சத்யப்ரியா உட்பட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் ரவிச்சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது. ரவிச்சந்திரன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ் திரைப்பட ரசிகர்களால் 'வெள்ளிவிழா நாயகன்' என்று போற்றப்பட்டவர் ரவிச்சந்திரன். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment