ரயில் நிலைய படப்பிடிப்பில் ரகளை : நடிகர் நகுலனை கைது செய்யக் கோரி மாணவர்கள் திடீர் மறியல்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரயில் நிலைய படப்பிடிப்பில் ரகளை : நடிகர் நகுலனை கைது செய்யக் கோரி மாணவர்கள் திடீர் மறியல்!

7/5/2011 10:06:55 AM

நடிகர் நகுலன் ஹ¦ரோவாக நடிக்கும் வல்லினம் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் கடந்த 3 நாளாக செங்கல்பட்டு ரயில் ந¤லையத்தின் 8 பிளாட்பாரத்தில் நடந்து வந்தது. படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி வருகிறார். நேற்று 4 மணி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நகுலன், ஸடன்ட் மாஸ்டர், ஸ்டன்ட் நடிகர்கள் உட்பட 50 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர். அப்போது சென்னை செல்வதற்காக செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் 50 மேற்பட்டோர் ரயில் நிலையம் வந்தனர்.

 படப்பிடிப்பை பார்ப்பதற்காக 8வது பிளாட்பாரத்திற்கு வந்தனர். அங்கு நடித்துக் கொண்டிருந்த நகுலனிடம் ஆட்டோகிராப் கேட்டனர். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நகுலன், ஸ்டன்ட் மாஸ்டருடன் மாணவர்கள் வாய்த்தகராறு செய்தனர். தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அதில், மணிவண்ணன் என்ற மாணவனின் சட்டை கிழிந்தது. சட்டக் கல்லூரி மாணவர்கள் என்றால் பயந்து விடுவோமா என்று அசிங்கமாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டி திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

நடிகர் நகுலன், ஸ்டன்ட் மாஸ்டரை கைது செய்ய வேண்டும், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரி ரயில் நிலையத்தின் 3, 4, மற்றும் 5வது பிளாட்பாரத்தில் தண்டவாளத்தில் அமர்ந¢து மறியல் செய்தனர். இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக சென்னை பீச் வரை செல்லும் 3 மின்சார ரயில்கள் புறப்பட முடியவில்லை. ரயில்வே போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. மறியல் தொடர்ந்தது.

செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன்னி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, ரயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் உள்ளிட்ட 50 போலீசார் மீண்டும் பேச்சு நடத்தினர். நகுலன், ஸ்டன்ட் மாஸ்டர் இருவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் உறுதியாக தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஏஎஸ்பி பொன்னி கூறினார். அதன்பேரில் ஸ்டன்ட் மாஸ்டரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்நிலையில் நகுலன் காரில் ஏறி செல்ல முயன்றார். அவரை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர். இதனால் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் நகுலனை காவல் நிலையம் அழைத்து சென்றார்.

 

Post a Comment