மலையாளத்தில் எமி!
7/6/2011 11:32:03 AM
'மதராசப்பட்டணம்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லண்டன் மாடல் எமி ஜாக்சன். இவர், கவுதம் மேனன் இயக்கும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்போது, லால் ஜோஷ் இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு 'ஸ்பானிஷ் மசாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. திலீப், குஞ்சகோ போபன் ஹீரோக்கள். மலையாளத்தில் இருந்து ஸ்பெயின் செல்லும் திலீப், அந்நாட்டு பெண் மீது காதல் கொள்வதும் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் கதை. இந்தப் படத்துக்காக, ஆங்கில பெண் ஒருவரை ஹீரோயினாக நடிக்கத் தேடி வந்தனர். இப்போது, எமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment