கொச்சி: வரி ஏய்ப்பு, அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு போன்ற புகாரிகளின் அடிப்படையில் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலிடம் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவர் மீதும் வரி ஏய்ப்பு செய்தததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய 4 இடங்களில் நடிகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பல லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக கொச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஆஜரான இருவரிடமும் அதிகாரிகள் நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரத்தில் உள்ள மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் இந்த தொடர் கிடுக்கிப் பிடி நடவடிக்கையால் இருவருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Post a Comment