பெற்றோர் சம்மதத்துடன் காதலரை மணக்கிறார் ஜெனிலியா

|


ஒரு வழியாக ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

எனவே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு காதலரை கைப் பிடிக்கிறார் ஜெனிலியா.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஜெனிலியாவும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் சில வருடங்களுக்கு ஒரு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன். ஜெனிலியா - ரிதேஷ் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்தனர். ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.

எனவே எதிர்ப்பை கைவிட்டு, சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவு இத்தனை நாட்கள் ரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பெற்றோர் அனுமதியுடன் பகிரங்கமாக ஜோடியாக சுற்றுகின்றனர்.

சமீபத்தில் கனடாவில் நடந்த ஐஃபா விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடனிருந்தார்.

கைவசமுள்ள படங்களை ஜெனிலியா முடித்துக் கொடுத்ததும் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.
 

Post a Comment