வேலாயுதம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கோவை அருகே பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் நடந்து வருகிறது.
சமீபத்தில் வல்ல கவுண்டபுரம் என்ற ஊருக்குப் போயிருக்கிறார்கள் விஜய்யும் படப்பிடிப்புக் குழுவினரும். இந்த கிராமத்தில் படப்பிடிப்புக்காக பெரிய கிணறு வெட்டியிருக்கிறார்கள்.
கிராமத்து மக்களுடன் ரொம்பவே ஒன்றிப் போன விஜய்க்கு இந்த கிராமம்தான் காமெடி கிங் கவுண்டமணியின் சொந்த ஊர் என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே கவுண்டரின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து தேடிப் போயிருக்கிறார்கள்.
அங்கே கவுண்டமணியின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில்தான் கவுண்டமணியின் தாயார் இப்போதும் வசித்து வருகிறார்.
வீடு தேடி வந்த விஜய் மற்றும் படக்குழுவினரை அன்புடன் வரவேற்ற கவுண்டமணியின் தாயார், அவர்களை உபசரித்ததோடு, அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி அளித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கிராமத்து மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அனைவருக்கும் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இப்போது அது 'வேலாயுதம் கிணறா'க பிரபலமாகிவிட்டது!

Post a Comment