மானமே போச்சு... 1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க! - நடிகை ரீமாசென்

|


தான் நடித்த வங்க மொழிப் படத்தை, செக்ஸ் படம் போல சித்தரித்து போஸ்டர் அடித்ததால் மானமே போய்விட்டதாக புலம்பித் தள்ளிய நடிகை ரீமா சென், அதற்கு நஷ்ட ஈடாக ரூ 1 கோடி கேட்டுள்ளார் தயாரிப்பாளரிடம்.

கடந்த சில நாட்களாக இளவரசி என்ற பெயரில் ரீமா சென்னின் படு செக்ஸியான போஸ்டர்கள் சென்னை நகரெங்கும் ஒட்டப்பட்டு வருகின்றன.

இது வங்க மொழியில் இதி ஸ்ரீகந்தா என்ற தலைப்பில் வெளியான படத்தின் தமிழ் டப்பிங் ஆகும். இதில் செக்ஸ் தொழிலாளியாக வரும் ரீமா சென், வாடிக்கையாளர் ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

அந்தக் காட்சியை ஸ்டில்களாக்கி வெளியிட்டு பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் படத்துக்கு.

விஷயம் தெரிந்து கொதித்துப் போன ரீமா, "இது பலான படமல்ல. பக்கா ஆர்ட் பிலிம். இதை இப்படி காட்டியதால் என் மானமே போயிடுச்சி," என நண்பர்களிடம் புலம்பினாராம்.

மேலும், "விளம்பரத்தை உடனே நிறுத்தலைன்னா உங்க மேல ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன்," என்று தயாரிப்பாளரையும் எச்சரித்துள்ளார்.

ஆனால் இதெற்கெல்லாம் அசராத தயாரிப்பாளர், இது எனது படம். இதில் நடித்ததற்கு போதிய அளவு சம்பளம் கொடுத்துவிட்டேன். இனி நான் என்ன செய்தாலும் கேட்க சம்பந்தப்பட்ட நடிகைக்கு உரிமையில்லை. படத்தில் இருப்பதைத்தானே காட்டியுள்ளேன், என்று பதிலுக்கு எச்சரிக்க, ரீமா அமைதியாகிவிட்டாராம்!
 

Post a Comment