ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி அபேஸ்... நடிகர் மீது புகார்!

|


சென்னை: வேலை வாங்கித் கூறி இளைஞர்களிடம் ரூ 1 கோடி வரை சுருட்டியதாக சுட்டும் விழிச் சுடரோ என்ற படத்தில் நடித்த சுமேஷ் மீது புகார் தரப்பட்டுள்ளது.

சுட்டும் விழி சுடரோ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சுமேஷ். இவர் சென்னை வடபழனி ஆண்டவர் நகர், 6-வது தெருவில் உள்ள சீனிவாசா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். நேற்று மாலை இவரது வீட்டை இளைஞர்கள் சிலர் வக்கீலோடு சென்று முற்றுகையிட்டனர்.

அந்த இளைஞர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவார்கள். அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக, நடிகர் சுமேசும் அவரது குடும்பத்தினரும், ரூ.1 கோடி வரை பணம் வாங்கினார்கள் என்றும், வேலை வாங்கி கொடுக்காமல் பட்டை நாமம் போட்டு விட்டார்கள் என்றும், புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் நடிகர் சுமேசை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது தந்தையிடம் கேட்டால்தான் இது பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இதையொட்டி அவரை போலீசார் இரவு விடுவித்து விட்டனர்.

சுமேசின் தந்தையிடம் இதுபற்றி விசாரிக்கப்படும் என்றும், விசாரணை முடிந்த பிறகு மேல்நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.
 

Post a Comment