திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி பட சிடிக்களை விற்றவர் கைது

|


திருவாரூர்: திருவாரூரில் காஞ்சனா, கருங்காலி போன்ற புதிய திரைப்பட டிசி-க்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் காட்டூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் பாலகுருசாமி(38). இவர் திருவாரூர் பஸ் நிலையத்தில் வீடியோ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுப்பட சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவாரூர் நகர போலீசார், பாலகுருசாமியின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி திருட்டுத்தனமாக புதிய பட டிவிடி-க்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

பாலகுருசாமியை கைது செய்த போலீசார், அவரது கடையில் இருந்த காஞ்சனா, கருங்காலி உள்பட 20க்கும் மேற்பட்ட புதுப்பட சிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் போலீஸ் சோதனைக்கு பயந்து திருவாரூரில் வீடியோ கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது.
 

Post a Comment