பாடகி சின்மயி அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் டெக்னிக்!

|


பிரபல சினிமா பாடகி சின்மயி, தனது பாடல்களை புரமோட் செய்வதற்கேற்ப சொந்தமாக மொபைல் போன் பயன்பாட்டு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் பாடகிகளில் பிரபலமானவர் சின்மயி. வெளிப்படையாக துணிச்சலாக கருத்து சொல்லக் கூடியவர்.

சமீபத்தில் இவர் அமெரிக்கா போயிருந்தபோது அங்குள்ள நண்பர் ஒருவர் மொபைல் போனுக்கான பல்வேறு அப்ளிகேஷன்களை காட்டியுள்ளார்.

அதில் ஒன்றை தனக்கேற்ற மாதிரி மாற்றிக் கொண்டாராம் சின்மயி.

இந்த அப்ளிகேஷனை மொபைலில் வைத்திருந்தால், சின்மயியுடன் நேரில் உரையாடுவது போல தகவல் பரிமாறிக் கொள்ளலாம். சின்மயி எங்கே இருக்கிறார், அவரது நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். வீடியோ மூலம் கூட உரையாடலாம்.

ரசிகர்கள் தங்கள் போனில் இந்த வசதியைப் பயன்படுத்தி சின்மயியிடம் கேட்க விரும்புவதைக் கேட்கலாம்.

ஆப்பிள் மேக்-ஐ சப்போர்ட் பண்ணும் அனைத்து மொபைல்களிலும் இந்த வசதியைப் பெற முடியும். நியூயார்க்கை சேர்ந்த மொபைல் டெவலப் நிறுவனமான தாக்ஷாவுடன் இணைந்து இந்த வசதியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

Post a Comment