பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!

|


நடிகர் சிம்பு நேரடியாக மோதாமல் பின்னால் மறைந்திருந்து குத்துகிறார் என்று நடிகர் ஜீவா குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமாவில் இப்போது முட்டிக் கொண்டு நிற்கும் இரு ஹீரோக்கள் சிம்பு- ஜீவா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், ‘கோ.’ இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் தொடர்பாக சிலம்பரசனுக்கும், ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது.

சிம்பு என்றுமே என் நண்பரில்லை!

இந்த நிலையில், நடிகர் ஜீவா நேற்று நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்தார். அப்போது, சிலம்பரசனுடன் நடக்கும் மோதல் பற்றி ஜீவாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல,” என்றார்.

இப்போது வந்தான் வென்றான், முகமூடி படங்களில் நடிக்கும் ஜீவா, எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

 

Post a Comment