கன்னட திரையுலகில் நுழைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னட திரையுலகில் நுழைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

8/11/2011 11:37:47 AM

தனது திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். காட்பாதர் என்ற கன்னடப் படத்திற்கு அவர்தான் இசை. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி, இந்திய இசையமைப்பாளராக உயர்ந்து, இப்போது உலக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கன்னடப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். காட்பாதர் என்ற படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர். உபேந்திரா மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் செளந்தர்யா நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த கதைதான். ஆம், அஜீத் நடித்த வரலாறு படத்தின் ரீமேக்தான் இது. இப்படத்தில் தந்தை அஜீத்துக்கு ஜோடியாக, கனிகா நடித்திருப்பார். இப்போது கனிகா வேடத்தில் கன்னடத்தில் நடிக்கப் போவது நம்ம ஊர் சிம்ரன். மகன் உபேந்திராவின் ஜோடியாக வரப் போகிறார் செளந்தர்யா. இவர் அந்தக் கால கன்னட நாயகி ஜெயமாலாவின் மகள் ஆவார். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. அது பி.சி.ஸ்ரீராம். அவர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

 

Post a Comment