8/9/2011 3:19:49 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
வங்காள லாங்குவேஜ்ல ரீம ஹீரோயின் நடிச்ச படத்துல கிளாமர் ஓவராம்... ஓவராம்... அந்த படத்தை தமிழ்ல ரிலீஸ் பண்ண, கிளு கிளு படம் மாதிரி சித்தரிச்சி தயாரிப்பு போஸ்டர் ஒட்டினாராம். இது பற்றி தகவலறிந்த ரீம ஹீரோயின் உர்ராயிட்டாராம்... உர்ராயிட்டாராம்... தயாரிப்பை போன்ல கூப்பிட்டு ஒருபிடி பிடிச்சதோட, மான நஷ்ட வழக்கு போடுவேன்னு எச்சரித்தாராம். அதை கேட்டு தயாரிப்பு ஆடிப்போயிட்டாராம்... போயிட்டாராம்...
கல்லூரி நடிகைக்கு கோலிவுட்ல கைவசம் படம் இல்லாததால அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த மயி பாடகி சோகத்துல இருந்தாராம்... இருந்தாராம்... இது பற்றி கேள்விப்பட்ட டாப்பானசி ஹீரோயின் தான் நடித்துள்ள 'வந்து ஜெயிக்கிறÕ படத்துக்கு மயி பாடகியை டப்பிங் பேச இயக்கத்திடம் சிபாரிசு பண்ணினாராம்... பண்ணினாராம்... இயக்கமும் ஏற்கனவே தன்னோட படத்துல அவருக்கு வாய்ப்பு தந்திருந்ததால இந்த படத்துலேயும் பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்துட்டாராம்... கொடுத்துட்டாராம்...
மல்லுவுட்ல கை ந¤றைய பேமென்ட் கிடைக்காததால, கோலிவுட்ல கவனம் செலுத்த நாடோடியான ஹீரோயின் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... சமீபத்துல நடந்த பட பாடல் விழாக்கு வந்த ஹீரோயின், பங்ஷன்ல கலந்துகிட்ட இயக்கங்களை சந்திச்சி, சிரிச்சி சிரிச்சி அன்பா பேசினாராம்... பேசினாராம்...
Post a Comment