அமிதாப் படத்துக்கு மாயாவதி தடை!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

அமிதாப் படத்துக்கு மாயாவதி தடை!

8/11/2011 11:31:07 AM

அமிதாப்பின் ஆராக்ஷன் படத்தில் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால்தான் அனுமதிக்க முடியும் என உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் இந்தப் படம் வட இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில் கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.

 

Post a Comment