8/3/2011 12:06:29 PM
சேரன், பிரசன்னா, ஹரிப்பிரியா, நிகிதா நடித்துள்ள படம் 'முரண்'. படம் பற்றி இயக்குனர் ராஜன் மாதவ் கூறியதாவது: முரண்பாடுள்ள கருத்துகளை கொண்ட இரண்டு பேர் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருமே ஒவ்வொரு விஷயத்தையும் வெவ்வேறுவிதமாகப் பார்ப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, சவால்தான் கதை. இதன் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். பெங்களூர்-சென்னை ஹைவேஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அருகே புதிதாக போடப்பட்டிருந்த 'நைஸ்' சாலையில் சிறப்பு அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இப்போது, அங்கு ஷூட்டிங் நடத்த தடை விதித்துள்ளனர். இந்த லொகேஷன் புதுமையானதாக இருக்கும். படம் தாமதம் என்று சொல்வதை ஏற்க மாட்டேன். ஷூட்டிங்கிற்கு கொஞ்சம் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டோம் என்று சொல்லலாம். இப்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. செப்டம்பர் மாதம் வெளியிட, யுடிவி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு ராஜன் மாதவ் கூறினார்.
Post a Comment