8/24/2011 10:14:47 AM
'ராணா' படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆபீஸில் நடக்கும் டிஸ்கஷனில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்த 'ராணா' படப்பிடிப்பில் திடீரென்று உடல்நிலை குன்றிய ரஜினி, சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர், தன் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிலும், போயஸ் கார்டனிலுள்ள தன் வீட்டிலும் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், 'ராணா' படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷூட்டிங்கில் பழைய உற்சாகத்துடன் நடிக்க முடியும் என்று, ரஜினியைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தினமும் ரஜினியை சந்தித்து, 'ராணா' படப்பிடிப்பு தொடங்குவது குறித்து ஆலோசித்து வந்தார். இதையடுத்து, சென்னை அசோக் நகரிலுள்ள ரவிகுமாரின் அலுவலகத்துக்கு தினமும் நேரில் வரும் ரஜினி, காலை முதல் மாலை வரை கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். அடுத்த மாதம் 'ராணா' படப்பிடிப்பு தொடங்கும் என்று, பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
Post a Comment