நடிகைகள் சமந்தா, நித்யா மேனனுக்கு நந்தி விருது!

|


நடிகைகள் நித்யாமேனன், சமந்தாவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகைகளாக உள்ளனர்.

நித்யாமேனன் 180 படத்தில் சித்தார்த்துடன் நடித்து இருந்தார். இப்படம் சமீபத்தில் தமிழகமெங்கும் ரிலீசானது. தெலுங்கிலும் வெளியானது இந்தப் படம்.

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் வெப்பம் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தமிழ்ப் பதிப்பில் கவுரவ வேடத்திலும், அதன் தெலுங்குப் பதிப்பில் நாயகியாகவும் நடித்தவர் சமந்தா. பாணா காத்தாடி படத்திலும் நாயகியாக நடித்தார்.

சிம்ஹா படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த நடிகருக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. சிறந்த படமாக வேதம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இப்படம் தமிழிலில் சிம்பு, பரத் நடிக்க வானம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது சுனில்குமார் ரெட்டிக்கு கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சக்ரிக்கும் பிரபல பின்னணி பாடகி சின்மயி சிறந்த டப்பிங் கலைருக்கான விருதையும் பெற்றார்.
 

Post a Comment