தெய்வத்திருமகள் டப்பிங் கலைஞர்களுக்கு மரியாதை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெய்வத்திருமகள் டப்பிங் கலைஞர்களுக்கு மரியாதை

8/6/2011 11:29:38 AM

'தெய்வத் திருமகள்' படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் சந்திப்பு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் குழந்தை நட்சத்திரம் சாராவுக்காக டப்பிங் பேசிய சிருங்கா (டப்பிங் ஆர்டிஸ்ட் சவீதாவின் மகள்), அனுஷ்காவுக்கு டப்பிங் பேசிய தீபா வெங்கட், அமலா பாலுக்கு பேசிய சவீதா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அனுஷ்கா டப்பிங் பேச விரும்பியதாகவும் ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை என்றும் இயக்குனர் விஜய் சொன்னார். டப்பிங் கலைஞர்கள் தவிர படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கு இயக்குனர் பாலா, பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், 'இந்த படத்தின் நிஜ ஹீரோ இயக்குனர் விஜய்தான். அடுத்தும் இருவரும் சேர்ந்து படம் பண்ணுகிறோம். மாற்று திறனாளிகள் ஒரு வகையில் நம்மை விட சிறந்தவர்கள், அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற மெசேஜை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கிறோம்' என்றார். 'இது நெகிழ்ச்சியான படம் என்பதால், ஒரு தியேட்டரின் பால்கனி டிக்கெட் முழுவதையும் வாங்கி தனியாக உட்கார்ந்து பார்த்தேன். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை அழுது கொண்டே இருந்தேன்' என்றார் பாலா. நிகழ்ச்சியில், அனுஷ்கா, அமலா பால், இசை அமைப்பளார் ஜி.வி.பிரகாஷ், யுடிவி தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




 

Post a Comment