நடிகைகளுக்கு கோயில் கட்டுவது தவறு. ரசிகர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் போதும். நடிகைகளை அந்த உயரத்துக்குக் கொண்டு போவது தவறு, என்றார் ஹன்ஸிகா மோத்வானி.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஹன்சிகா மோத்வானி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையி்ல், "மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானேன். அடுத்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். தற்போது விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வருகிறேன்.
தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்துள்ளேன். வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் வலுவான கேரக்டர்கள் அமைந்துள்ளன. என்னை குட்டி குஷ்பு என்று அழைக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
குஷ்பு என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும்படி அறிவுரை கூறினார். நல்ல கதைகள் அமைந்தால் புது நடிகர்களுடனும் ஜோடியாக நடிப்பேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. நீச்சல் உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன். இரவு விருந்துகளுக்கு போகும் பழக்கம் இல்லை. நடிப்பு, ஜிம், வீட்டில் ஓய்வு என்று நல்ல பெண்ணாக இருக்கிறேன்.
வேலாயுதம் படத்தில் ஜெனிலியாவுடன் இணைந்து நடித்த போது எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. தமன்னா எனக்கு நெருங்கிய தோழி. அவரிடம் அடிக்கடி மனம் விட்டுப் பேசுவேன்.
ஹீரோக்களில் பிடித்தவர் ரஜினி சார். அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் படித்து வருகிறேன். விரைவில் தமிழில் பேசி நடிப்பேன்.
இங்கு நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவதாகச் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த நிலைக்கு நடிகைகளை கொண்டு செல்ல வேண்டாம்," என்றார்.

Post a Comment