நடிகர்கள் சம்பளம் குறைப்பு: திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

|


சென்னை: நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் நாளை நடக்கிறது.

சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர்கள் சம்பள பிரச்சினை, டிக்கெட் கட்டணம், எந்திரன் பட விவகாரம், தயாரிப்பு செலவுகளை குறைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இது குறித்து சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நடிகர்கள் சம்பளம் ரூ.15 கோடி, ரூ.20 கோடி என உயர்ந்து தயாரிப்பு செலவுகளை அதிகப்படுத்தி விட் டது. டெக்னீஷியன்கள் சம்பளமும் கூடி விட்டது. 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகரின் மானேஜர் 15 சதவீதம் கமிஷன் என்ற பெயரில் ரூ.1.5 கோடி பெறுகிறார்.

இதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம். நாளைய பொதுக்குழுவில் இது வரைமுறை படுத்தப்படும் என்றார்.
 

Post a Comment