டிவி நடிகையுடன் விபச்சாரம்: காங்கிரஸ் தலைவர் கைது!

|


மலப்புரம் அருகே காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் உன்னித்தான், டிவி நடிகையுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருப்பவர் ராஜ்மோகன் உன்னித்தான் (54). அக்கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கொல்லத்தை சேர்ந்த பிரபல டிவி நடிகையுடன் காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அப்பகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த வீட்டு முன் திரண்டு காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகனை கைது செய்யவேண்டும் எனக் கோஷமிட்டனர். ராஜ்மோகன் அந்த வீட்டிலிருந்து வெளியேற விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து ராஜ்மோகன் மற்றும் டிவி நடிகையை போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இருவர் மீதும் விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மாலை அவர்கள் மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த மஞ்சேரி மாஜிஸ்திரேட் வர்கீஸ், ராஜ்மோகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ஜெயலட்சுமிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
 

Post a Comment