மலையாள சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் கதாநாயகனாகிறார்.
துல்கருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் சென்னையைச் சேர்ந்தவர்.
முதலில் லிங்குசாமி இயக்கும் தமிழ் படத்தில் துல்கரை நாயகனாக அறிமுகம் செய்ய மம்முட்டி விரும்பினார். ஆனால் அது முடியாமல் போனது. எனவே மலையாளத்தில் தயாராகும் 'செகண்ட் ஷோ' என்ற படத்தில் கதாநாயகனாக்கவிட்டார்.
கதாநாயகியாக அவந்திகா நடிக்கிறார். படப்பிடிப்பு கோழிக்கோட்டில் சமீபத்தில் தொடங்கியது.
இதுகுறித்து மம்முட்டி கூறுகையில், "சினிமாவில் வாரிசு உருவாக்குவது என் நோக்கமல்ல. யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதில் ஈடுபட வேண்டும். துல்கருக்கு சினிமா பிடித்திருக்கிறது. அவனுக்காக நிறைய கதைகள் கேட்டேன். தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன, மலையாளத்தில் நடித்துவிட்டு தமிழிக்குப் போகட்டுமே," என்றார்.

Post a Comment