8/22/2011 11:26:20 AM
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இலியானா, ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார். இதற்கிடையில் அனுராக் பாசு இயக்கும் 'பார்ஃபி' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார்கள். இதுபற்றி இலியானா கூறியதாவது: என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. இந்தி படங்களில் நடிப்பதற்காக எனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டதாகவும் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறேன் என்றும் ஏராளமான செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் ஒருபோதும் நான் கருத்துக்கூறவோ, அல்லது மறுக்கவோ மாட்டேன். பலர் பலவிதமாக தொடர்ந்து எழுதிகொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஆனாலும் என் தகுதிக்கேற்ற சம்பளத்தையே பெறுகிறேன். இனி, பாலிவுட்டுக்குதான் முக்கியத்துவமா என்றும் கேட்கிறார்கள். அப்படியில்லை. நடிப்பு என் தொழில், அதனால் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எந்த மொழி என்று பார்க்கவில்லை. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்தியில் '3 இடியட்ஸ்' படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் கரினா கபூரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் நடித்தது போல நடிக்க மாட்டேன். இவ்வாறு இலியானா கூறினார்.
Post a Comment