பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்துக்கு மாறினார் நயன்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்துக்கு மாறினார் நயன்!

8/9/2011 10:15:35 AM

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. இதையடுத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அவர் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம். இவரது தந்தை குரியன். தாய் ஓமணா மலையாள கிறிஸ்தவரான இவர் சினிமாவுக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார். இவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. இதையடுத்து பிரபுதேவா, நயன்தாரா திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொச்சியில் தங்கியிருந்த நயன்தாரா, நேற்றுமுன்தினம் விமானத்தில் சென்னை வந்தார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்கு காலை 11 மணிக்கு சென்றார். அங்கு இந்து மதத்துக்கு மாறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து சுத்திகர்மா முறைப்படி அவருக்கு மதமாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை புரோகிதர்கள் செய்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூறினர். புரோகிதர்கள் சொல்லி கொடுத்தபடி வேத மந்திரங்களை, நயன்தாரா திரும்ப சொன்னார். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சடங்குகள் நடைபெற்றன. பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டு கொச்சி திரும்பினார். இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் இந்துவாக மாறி விட்டேன். இது என் சொந்த விருப்பம். அதற்கான சடங்குகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றேன்'' என்றார். பிரபுதேவாவுடன் எப்போது திருமணம் என்பதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். இந்து மதத்துக்கு மாறியதையடுத்து, பிரபுதேவாவை நயன்தாரா விரைவில் திருமணம் செய்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.




 

Post a Comment