டிசம்பரில் 'டோணி' ரிலீஸ்!

|


பிரகாஷ் ராஜின் இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் உருவாகி வரும் டோணி திரைப்படம் டிசம்பரில் திரையிடப்படும் என்று பிரகாஷ் ராஜ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் இது. தமிழ் மற்றும் தெலுங்கில்இதை உருவாக்குகிறார் பிரகாஷ் ராஜ். இவர்தான் படத்தின் நாயகனும் கூட. முக்தா கோட்சே நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறதாம். விரைவில் சென்னைக்கு ஷிப்ட் ஆகவுள்ளனர். அதன் பின்னர் டிசம்பரில் படம் திரைக்கு வருமாம்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இந்தப் படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்த இசைஞானி, படத்தின் பாடல்களை லைவ் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்துள்ளாராம். இது தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது மிக மிக அரிதான ஒரு விஷயம். அதை இளையராஜா செய்துள்ளார்.

படம் பிரமாதமாகவும், சுவாரஸ்யமாகவும், நல்ல ஒரு செய்தியுடனும் கூடியதாக இருக்கும். இளையராஜாவின் இசை எங்களுக்கே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, ரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக அமையும் என்று பிரகாஷ் ராஜ் சந்தோஷமாக கூறினார்.

சீக்கிரம் வாங்க டோணி...!
 

Post a Comment