காஞ்சனா இந்தி ரீமேக்கில் லாரன்ஸ் இல்லை
9/19/2011 3:52:38 PM
லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். ஆனால் படத்தை லாரன்ஸ் இயக்கவில்லை. காஞ்சனா தமிழில் வெளியாகும் முன்பே இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான்கான் ஆர்வமாக இருப்பதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இதனை நேற்று சல்மான் தரப்பு உறுதி செய்தது. சல்மானின் சகோதரர் சோஸைல் கான் படத்தை இயக்குகிறார். காஞ்சனா ரீமேக் மூலம் இந்திக்கு செல்லலாம் என்று லாரன்ஸ் எண்ணியிருந்தார். பிரபாஸ் நடிக்கும் ரிபெல் படத்தில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பு கை நழுவியிருக்கிறது.
Post a Comment