ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைய வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

|


மதுரை: தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குஷ்பு, அனுமதி பெறாமலேயே ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

ஆண்டிப்பட்டி போலீசார் தேனி நீதிமன்றத்தில் குஷ்பூ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அப்போது குஷ்பு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பூ முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணைடந்த பின்னர் ஜாமீ்ன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

பழனிச்செட்டிப்பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
 

Post a Comment