அன்னா ஹஸாரே ஆதரவு எதிரொலி- அரசு சீரியலிலிருந்து ஓம்பூரி நீக்கம்

|


சமூக சேவகர் அன்னா ஹஸாரேவுடன் தொடர்பு வைத்திருப்பதால், நடிகர் ஓம்பூரியை, அரசு சீரியலிலிருந்து நீக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் பிரபலமான பாரத் ஏக் கோஜ் போன்றதொரு நெடும் தொடரை, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கவுள்ளது. உள்ளாட்சி தத்துவம், அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கும் தொடர் இது. இதில் நடிக்க ஓம்பூரியைத் தேர்வு செய்திருந்தனர். ஆனால் தற்போது அவரை திடீரென நீக்கி விட்டனர்.

அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓம்பூரி செயல்படுவதால் இந்த நீக்கமாம். அன்னா ஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது மத்திய அரசையும், எம்.பிக்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார். எம்.பிக்களை கேலி செய்து அவர் விமர்சித்ததால் அவருக்கு நாடாளுமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் அரசு டிவி சீரியலிலிருந்து ஓம்பூரியை நீக்கியுள்ளனர்.
 

Post a Comment