பாலிவுட்டில் நடிப்பில் பெயர் எடுத்தவர் வித்யா பாலன். தமிழில் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடித்த மனசெல்லாம் படத்தில் முதலில் வித்யா பாலனைத் தான் ஒப்பந்தம் செய்தனர். அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்திருக்கிறார். பின்னர் அவருக்கு நடிக்க வரவில்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.
நடிக்கவே தெரியவில்லை என்று ஒதுக்கப்பட்ட வித்யா பாலன் தன் நடிப்புத் திறமையை பாலிவுட்டில் காட்டினார். பாலிவுட்டும் அவரை நல்லபடியாக வரவேற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. மணி ரத்னத்தின் குரு படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்போது வித்யாவின் பெயர் அதிக அளவில் உச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சூட்டோடு சூடாக, வித்யாவை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர்இறங்கியுள்ளனராம்.
தமிழ் இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியுள்ளனர். அதற்கு வித்யா ஸாரி நான் இந்தியில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
‘பழைய’ காயம் இன்னும் ஆறவில்லை போலும்…!
Post a Comment