புதிய படம் தொடங்குகிறார் பாலா... ஹீரோ அதர்வா!

|


புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் பாலா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது.

இயக்குநர் பாலா எப்போது படம் தொடங்குவார், அவர் படத்தில் ஹீரோவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் போன்றவை தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படும் சமாச்சாரம்.

அவன் இவன் படத்துக்குப் பிறகு, சில மாதங்கள் அமைதியாக இருந்த பாலா, அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

எப்போதுமே தன் கைக்கு அடக்கமாக, சொன்ன பேச்சைக் கேட்கிற நடிகர்களைத்தான் தன் படங்களில் ஹீரோவாக்குவார் பாலா. அந்த வகையில், பாணா காத்தாடி மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு அடித்துள்ளது அதிர்ஷ்டம்.

சமீபத்தில் ஒருநாள் அதர்வாவை தன் அலுவலகத்துக்கு வரச் சொன்ன பாலா, புதிய படங்கள் எதையும் இனி ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் படம் பண்ணுகிறோம் என்று கூறினாராம்.

இந்த திடீர் சந்தோஷ அறிவிப்பார் திக்குமுக்காடிப்போன அதர்வா, பாலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.

நாயகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பற்றி விரைவிலேயே பாலா விவரமாக அறிவிப்பார் என்கிறார்கள்.
 

Post a Comment