9/21/2011 11:30:59 AM
மெரீனா சிறுவர்களின் வாழ்க்கையை 'மெரீனா' என்ற பெயரில் இயக்கி உள்ளார் பாண்டிராஜ். படம்பற்றி அவர் கூறியதாவது: 'பசங்க' படத்தில் கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தது போன்று நகர்புறத்து சிறுவர்களின் வாழ்வை பதிவு செய்யும் முயற்சியே இந்தப் படம். இதற்காக பல மாதங்கள் சென்னையில் பெசன்ட் நகர் முதல் துறைமுகம் வரையிலான கடற்கரையில் அலைந்து கதைக்கான கேரக்டர்களை கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இங்கு வாழும் சிறுவர்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் படமாக்கியிருக்கிறேன்.
குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்வதால் படத்தின் சுவைக்காக, மெரீனாவின் முக்கிய அங்கமான காதலை¬யும் சொல்கிறோம். சிவகார்த்திகேயன், ஓவியா காதலர்கள். மெரீனாவுக்குள் நுழையும்போது சந்தோஷமாக நுழைபவர்கள், சண்டையிட்டுக்கொண்டே திரும்புவார்கள். இவர்களுக்கும் சிறுவர்களுக்குமான தொடர்பில் சுவாரஸ்யங்கள் இருக்கும். படம் முழுவதும் சென்னை நகரின் கடற்கரைகளில் படமாக்கப்பட்டுள்ளது. கவுதம், பக்கோடா பாண்டி, அசோக் என்ற குழந்தை நட்சத்திரங்களோடு 15 மெரீனா சிறுவர்களையும் நடிக்க வைத்திருக்கிறேன்.
Post a Comment