9/19/2011 2:59:07 PM
தமிழில், 'வேட்டை', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி?', தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 'பேஜவாடா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். அவர் கூறியதாவது: லிங்குசாமி இயக்கும் 'வேட்டை' படத்தில் சமீரா ரெட்டியின் தங்கையாக நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண் வேடம். சமீராவுடன் நடித்தது நல்ல அனுபவத்தை கொடுத்தது. ஷூட்டிங் நாட்களில் நாங்கள் ஜாலியாக பொழுதை போக்குவோம். ஷூட்டிங் முடிந்த பின்னும் அவர் அக்கா போலவே பழக ஆரம்பித்தார். இப்போது அப்படியே எங்கள் நட்பு தொடர்கிறது. 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் எனது கனவு வேடம் என்று சொல்லலாம். இதில் திறமையை நிரூபிக்க அதிக வாய்ப்புள்ளது. முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். இதில் எனது வேடம் ஸ்டைலிஷாக இருக்கும். இந்த படத்தில் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். சமீபத்தில் ஆங்கில இதழில் வந்த எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு, 'நீ பிரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறாய்' என்று நயன்தாரா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். அவரிடமிருந்து இப்படியொரு வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை. அவர் மாதிரி முன்னணி நடிகை யாரும் இப்படியொரு வாழ்த்தை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று அவருக்கு நன்றி சொன்னேன்.
Post a Comment