9/27/2011 11:31:06 AM
இது ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்த ரௌத்திரம், வந்தான் வென்றான் படங்களும் ஓரளவிற்கு ஓடின, இதுமட்டுமின்றி நண்பன், நீதானே என் பொன்வசந்தம் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்குரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார். இதனால் ஜீவா, அவரது சம்பளத்தை கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது ஜீவா தான் சொல்ல வேண்டும்.
Post a Comment