9/19/2011 2:48:38 PM
டோலிவுட்டில் மார்க்கெட் இழந்த நிலையில் பாலிவுட் சென்ற சார்மி, 'புட்டா ஹோகா தேரா பாப்' படத்தில் நடித்தார். அடுத்து 'ஜில்லா காசியாபாத்' படத்தில் நடிக்கிறார். இதில் சஞ்சய் தத், விவேக் ஓபராய் நடிக்கின்றனர். சார்மியை படத்திலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகளை விவேக் ஓபராய் செய்தாராம். அதையும் மீறி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் அர்ஷத். இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார் மினிஷா. இப்போது சார்மிக்கு புதுஹீரோயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி யூனிட்டார் கூறும்போது, 'ஹீரோயின் மினிஷாவின் நடிப்பு இயக்குனரை கவர்ந்துவிட்டது. மேலும் நெருக்கம் காட்டும் மினிஷாவின் நட்பில் இயக்குனர் சொக்கிப் போய்விட்டார். இதையடுத்து மினிஷாவுக்கு கூடுதல் காட்சிகளை இயக்குனர் சேர்த்திருக்கிறார்' என்றனர். ஏற்கனவே ஓபராயின் நடவடிக்கையால் நொந்துபோய் இருந்த சார்மி, தற்போது மினிஷாவால் கலங்கி போய் இருக்கிறாராம்.
Post a Comment