நடிப்பு என் தொழில் அல்ல : ஸ்ரேயா கோஷல்!
9/24/2011 11:44:15 AM
9/24/2011 11:44:15 AM
'எந்திரன்' படத்தில், 'காதல் அணுக்கள்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் 'மன்னிப்பாயா', 'மைனா' படத்தில் 'நீயும் நானும்' உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் ஸ்ரேயா கோஷல். சினிமாவில் நடிக்க வருவது பற்றி அவர் கூறியதாவது: இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது என பலதரப்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறேன். பாடுவதுதான் என் தொழில். இந்திப் படங்களில் எப்போதோ நடிக்க கேட்டார்கள். மறுத்துவிட்டேன். பின்னர், தமிழ், தெலுங்கிலும் நடிக்க கேட்டார்கள். அது எனது தொழில் அல்ல. நடிப்பு என்பது வேறு களம். அதற்கான எந்த திறமையையும் நான் வளர்த்துக்கொள்ளவில்லை. பாடுவதில்தான் எனது முழுக்கவனமும். அதில் இன்னும் சாதிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.
Post a Comment