9/19/2011 3:07:01 PM
'மல்ட்டி ஸ்டார் படத்தில் தொடர்ந்து நடிப்பேன்' என்று ஸ்ரீகாந்த் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்த 'உப்புக்கண்டம் பிரதர்ஸ்' ரிலீசான பிறகு பல வாய்ப்புகள் வந்தது. அடுத்த ஆண்டு மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறேன். இப்போது தெலுங்கில் 'நிப்பு' படத்தில் ரவிதேஜா, பிரகாஷ் ராஜுடன் இணைந்து நடிக்கிறேன். எனது தங்கையாக தீக்ஷா சேத் நடிக்கிறார்.
தமிழில் 'நண்பன்' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அது நிறைவேறியுள்ளது. விஜய், ஜீவாவுடன் நடித்தது ஜாலியாக இருந்தது. இதுபோல் மல்ட்டி ஸ்டார் படத்தில் வாய்ப்பு அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து 'எதிரி எண் 3' படத்தில் பூனம் பஜ்வாவுடனும், 'பாகன்' படத்தில் ஜனனியுடனும் நடிக்கிறேன்.
Post a Comment