9/19/2011 2:53:55 PM
சோனியா அகர்வால் கூறியது: திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், 'வானம்' படத்தில் சிறிய வேடம். 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். மானத்தை மறைக்க தாவணி வாங்கக்கூட முடியாமல் கஷ்டப்படும் கிராமத்து ஏழைப் பெண் பாத்திரம். இந்த காட்சி நெல்லூரில் படமானது. அடுத்து நகருக்கு வந்து சினிமா சான்ஸுக்காக கம்பெனிகளில் வாய்ப்பு தேடும் தோற்றம். அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறேன். அப்போது கிளாமர் தோற்றம். இதைத் தொடர்ந்து ஒரு தோற்றம் இருக்கிறது. அது சஸ்பென்ஸ். 'கிளாமராக நடிப்பது ஏன்?' என்கிறார்கள். கிளாமராக நடிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு அழகான உடலமைப்பு வேண்டும். மீண்டும் நடிக்க முடிவு எடுத்தவுடனே அதற்கு என்னை தகுதியாக்கிக் கொண்டேன்.
Post a Comment